சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருது பெற்ற இந்தி திரைப்படம் ‘அந்தாதுன்’ தமிழில் ரீமேக் ஆகிறது.
தேசிய விருது மட்டும் இன்றி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மெல்போர்ன் திரைப்பட விழாவிலும் பல விருதுகளை வென்ற இப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தியா மற்றும் சீனாவில் வெளியாகி வசூல் சாதனை படைத்த இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
நடிகர் தியாகராஜன் இப்படத்தின் தமிழ் ரீமேக்கின் உரிமையை வாங்கியிருக்கிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடிக்கிறார்.
’அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், இயக்கிய ‘ஜானி கத்தார்’ என்ற திரைப்படத்தை ‘ஜானி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து பிரஷாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து தியாகராஜன் கூறுகையில், “'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்”என்றார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு தேர்வு செய்யப்பட்டவுடன் படப்பிடிப்பை துவக்க தியாகராஜன் திட்டமிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...