கீர்த்தி சுரேஷின் வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடிய ஹீரோ!
Friday August-16 2019

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், நடிக்ப்பு வராத நடிகை, என்ற இமேஜ் கீர்த்தி சுரேஷுக்கு இருந்தது. ஆனால், அந்த படம் ‘நடிகையர் திலகம்’ என்ற படம் வெளியாவதற்கு முன்பு தான். அப்படம் வெளியான பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழி திரையுலமும் கீர்த்தி சுரேஷையும், அவரது நடிப்பையும் கொண்டாடியது.

 

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது மூலம் கீர்த்தி சுரேஷை தற்போது இந்திய சினிமா உலகமே கொண்டாடி வருகிறது. தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் அறிமுகமாகும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

 

கீர்த்தி சுரேஷ், சந்தோஷமாக இருக்க, இப்படி பல காரணங்கள் இருந்தாலும், காரணமே இல்லாமல் கீர்த்தி சுரேஷின் வெற்றியை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ ஒருவர் சந்தோஷத்துடன் கொண்டாடியிருக்கிறார். அதுவும் ஆடம்பரமான பார்ட்டியோடு கொண்டாடியிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

 

அந்த மாஸ் ஹீரோவுடன் கீர்த்தி சுரேஷ், இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதற்காக தான் அந்த ஹீரோ கீர்த்தியின் வெற்றியை கொண்டாடினாரா? என்று கேட்டால், ”அதற்கும் மேல...” என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

 

எது எப்படியோ, ஆண்ட்ரியா போல, திருமணமான ஆணுடன் வைத்திருந்த தொடர்பால், மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு, அதனால் சிகிச்சைப் பெற்றேன், என்று கீர்த்தி சுரேஷ், எதிர்காலத்தில் சொல்லாமல் இருந்தால் சரி.

Related News

5487

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery