அஜித்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இனி வித்தியாசமான கதைக்களத்தில் தொடர்ந்து நடிக்க அஜித் முடிவு செய்திருக்கிறார். அடுத்ததாக அவர் இயக்குநர் வினோத்துடன் இணையும் படமும் அப்படிப்பட்ட கதைக்களம் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு பிடித்த விஷயம் ஏராளம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து ‘மாநாடு’ படத்தை எடுப்பதில் தீவிரம் காட்டினார். ஆனால், தற்போது அப்படம் இல்லை என்பது, அதனால் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதையும் நாடே அறியும்.
சிம்புவுக்கு பதில் மாநாடு படத்தில் நடிக்கப் போவது சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரது பெயர் அடிபட, யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் மாநாடு கதை அஜித்திடம் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் இயக்கத்தில் நடிக்கும் அஜித்தை சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்தாராம், அப்போது அஜித் மீண்டும் சேர்ந்து படம் பண்ணலாம், என்று கூற, அதற்கு வெங்கட் பிரபு அரசியல் கதை ஒன்று இருக்கிறது, என்று கூறியிருக்கிறார்.
ஆனால், அஜித்தோ அரசியல் கதை எல்லாம் வேண்டாம், வேறு எதாவது கதை சொல்லுங்க, அடுத்தப் படம் பண்ணலாம், என்று சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆக, அஜித்திடம் மாநாடு கதையை சொல்ல இயக்குநர் வெங்கட் பிரபு முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை அஜித் நாகரீகமாக தவிர்த்துவிட்டாலும், வெங்கட் பிரபுவுடன் அடுத்ததாக இணைவது உறுதியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...