பிக் பாஸில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்! - எலிமினேஷனில் நடந்த திடீர் மாற்றம்
Saturday August-17 2019

பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பான கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆண், பெண் என்று இரு பிரிவுகளாக பிரிந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த சண்டைகளுக்கு மூல காரணமாக இருப்பவரே வனிதா தான் என்றாலும், சண்டைகளில் அவர் தலையிடாமல் ஒதுங்கிக்கொள்கிறார்.

 

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மதுமிதா அல்லது அபிராமி இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் திடீரென்று நடந்த ட்விஸ்ட்டால் தற்போது எலிமினேஷனின் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

 

வனிதாவின் பேச்சை கேட்டுக் கொண்டு சண்டைப்போடும் மதுமிதா, தற்போது ரசிகர்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்த போட்டியாளராக உருவெடுத்திருக்கும் நிலையில், அவருக்கு ரசிகர்களின் வாக்குகளும் குறைந்து வருகிறது. இதனால், மதுமிதா தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகிறவர் என்று கூறப்பட்டது.

 

ஆனால், நேற்று நடைபெற்ற கேப்டனுக்கான போட்டியில் மதுமிதா வெற்றி பெற்று, அடுத்த வாரத்திற்கான கேப்டன் ஆகிவிட்டார். இதனால், அவர் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், முகேனுடனான காதல் சண்டையால் ரசிகர்களை கடுப்பேற்றிய அபிராமி, இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related News

5493

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery