பிக் பாஸ் சீசன் 3 யில் பல சண்டைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வெளியாகும் போட்டியாளர் விஷயத்தில் பிக் பாஸ் பலவித ட்விஸ்ட்டுகளை வைத்து மேலும் பரபரப்பு கூட்டியிருக்கிறார்.
இந்த வாரம் நாமினேஷனில் அபிராமி, மதுமிதா, லொஸ்லியா ஆகியோரது பெயர் இடம் பெற்ற நிலையில், மதுமிதா அடுத்த வாரத்திற்கான கேட்பன் போட்டியில் வெற்றி பெற்றதால் அவர் காப்பாற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று லொஸ்லியா காப்பாற்ற பட்டிருக்கிறார்.
இதனால், எலிமினேஷன் பட்டியலில் அபிராமி மற்றும் மதுமிதா இருவர் மட்டுமே இருக்க, மதுமிதா போட்டிக்கான கண்டெண்ட் கொடுப்பதில் முக்கியத்துவம் பெருவதால் அபிராமி தான் வெளியேற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு நம்பத்தகுந்த தகவல்களும் அபிராமி தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்பட்டது.
ரசிகர்களின் வாக்குகளை வைத்து பார்க்கும் போதும், அபிராமிக்கு குறைவான வாக்குகள் இருந்ததால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆம், பிக் பாஸில் இன்று அபிராமிக்கு பதில் மதுமிதா வெளியேறியிருக்கிறார்.
இதற்கு காரணம், மதுமிதா பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது தான் என்று கூறப்படுகிறது. நேற்று இரவே மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து எந்தவித புரோமோவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிக்கும் மதுமிதா, கமலுடன் பேசும் போது அவரது கையில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. மேலும், திரையில் தோன்றும் சேரன், மதுமிதா செய்தது தவறான செயல், என்றும் கூறுகிறார்.
இதோ அந்த புரோமோ,
#Day55 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/oAtURCOoUg
— Vijay Television (@vijaytelevision) August 17, 2019
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...