பிக் பாஸ் முதல் சீசனில் எப்படி ஓவியா தற்கொலை செய்துகொள்ள முயன்றாரோ அதுபோல், தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் மதுமிதா தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுமிதாவின் தற்கொலை முயற்சி உண்மை என்பதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் மதுமிதா கையில் கட்டுடன் இருக்கிறார். மேலும், திரையில் தோன்றும் சேரன், மதுமிதா செய்தது பெரிய தவறு என்றும் சொல்கிறார். இதனால், மதுமிதா தற்கொலைக்கு முயன்றது உறுதியாகியுள்ளது. மேலும், தற்கொலைக்கு முயன்ற மதுமிதா, இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், மதுமிதா தற்கொலைக்கான காரணம் பற்றி பிரபல நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சம்யுக்தா ஹெக்டே கூறியிருக்கிறார்.
கன்னட பிக் பாஸ் சீசன் 5-யில் போட்டியாளராக கலந்துக்கொண்ட சக்யுக்தா ஹெக்டே, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், “பிக் பாஸ் போட்டி மிகவும் மோசமானது. நாம் எதை செய்ய கூடாது என்று நினைக்கிறோமோ அதை செய்ய தூண்டும். போட்டி ஸ்கிரிப்ட் இல்லை, இருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது” என்று தெரிவித்திருக்கிறார்.
இவர் கூறியதை வைத்து பார்த்தால் நல்ல மனநிலையில் இருப்பவர்களை கூட பிக் பாஸ் வீடு, வேறு மாதிரியாக மாற்றிவிடும் போலிருக்கிறது. மதுமிதாவின் தற்கொலைக்கும் அதுவே காரணமாகவும் இருக்கும், என்றும் பேச்சு அடிபடுகிறது.
பிக் பாஸ் வீடு மோசமானது என்று கூறிய சக்யுக்தா ஹெக்டே, சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...