பிக் பாஸில் இருந்து மதுமிதா வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான சம்பவமாக அமைந்திருக்கிறது. தமிழச்சி என்ற பெயரில் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய மதுமிதா, பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியாக இருந்தாலும், வனிதாவின் கெடுபிடிக்கு ஈடுகொடுத்து அவர் காட்டிய அதிரடியால் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில், இந்த வாரம் அபிராமி தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார், என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், மதுமிதா தனது வேண்டாத வேலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றதானலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம், மதுமிதா இப்படி கையை அறுத்துக் கொண்டதற்கு காரணமே கவின் தான் என்றும் கூறப்படுகிறது.
காவிரி விவகாரத்தில் ஷெரீனுடன் மதுமிதா மல்லுக்கட்ட, இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட கவின், மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஷெரீனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். மேலும், “தமிழச்சி என்று சொல்லி கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரை கொடு” என்று கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளாலும் மதுமிதாவை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், மன உடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கவின், எதுவும் நடக்காதது போல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றாராம்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...