அனிதா தற்கொலை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த நடிகர் லாரன்ஸ், “பா.ஜ.க-வுக்கு காலம் பதில் சொல்லும்”என்று கூறியதாக தகவல் பரவியது. இதையடுத்து இந்த தகவல் செய்தியாக பல ஊடகங்களில் வெளியானது.
ஆனால், இதை மறுத்துள்ள நடிகர் லாரன்ஸ், நான் பா.ஜ.க. என்ற பெயரையே குறிப்பிடவில்லை. அனிதாவின் தற்கொலை குறித்து மட்டுமே கருத்து தெரிவித்தேன், என்று கூறியுள்ளார்.
இது குறித்து லாரன்ஸ் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தயவு செய்து அரசியலாக்காதீர்கள். நான் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை.
நேற்று எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்று இருந்தேன். தரிசனம் முடித்துவ் அரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள், சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள்.
கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன், நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள், நானும் ”காலம் பதில் சொல்லும்” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.க-வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்.
சேவையும், ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம், அரசியல் அல்ல. அப்படி இருக்க நான் எப்படி பா.ஜ.க பெயரை குறிப்பிடுவேன்.
அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா? என்றும் கேட்டார்கள், அது கடவுளுக்கும் எனக்கும், அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும், என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...