விஜய் படத்தில் வாணி போஜன்! - கலக்கத்தில் கோலிவுட் நடிகைகள்
Monday August-19 2019

சீரியல் உலகின் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து சில சீரியல்களில் நடித்தவர், தற்போது சீரியல் ஏரியாவை முழுவதுமாக புறக்கணித்துவிட்டு சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

 

பல வாய்ப்புகள் அவர் கதவை தட்டினாலும், வெயிட்டான வாய்ப்புக்காக காத்திருந்தவர், நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடிக்க ஓகே சொன்னார். தற்போது அப்படம் படப்பிடிப்பில் இருக்க, தெலுங்கு சினிமாவில் வாணி போஜன் கால் பதித்துள்ளார்.

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். இப்படத்தை சமீர் இயக்குகிறார்.

 

Vijay Devarkonda

 

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், மூன்றாவதாக ஒரு படத்தில் வாணி, கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை நடிகர் அருண் பாண்டியனின் ஏ-பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

அறிமுக படமே வெளியாகத நிலையில், இப்படி அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக வாணி போஜன் ஒப்பந்தமாவதை பார்த்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் சில நடிகைகள் கலக்கம் அடைந்திருக்கிறார்களாம்.

 

சீரியல் உலக நயன்தாரா, சினிமாவில் நயனுக்கே டப்பு கொடுப்பாங்க போலிருக்கே!

Related News

5500

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery