முடிவுக்கு வந்த அப்பா, மகள் உறவு! - சேரனுக்கு ஆப்பு வைத்த லொஸ்லியா
Monday August-19 2019

பிக் பாஸ் சீசன் 3 யில் கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்று மதுமிதா வெளியேறியதால், எலிமினேஷன் இருக்காது என்று போட்டியாளர்கள் எண்ணினார்கள். ஆனால், எலிமினேஷனும் இருக்கிறது, என்று கூறி அதிர்ச்சியளித்த பிக் பாஸ் அபிராமியை வெளியேற்றினார்.

 

இந்த நிலையில், இந்த வார எலிமினேஷன் பட்டியலில் யார் யார் பெயர் இடம்பெறப் போகிறது, என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க, ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரான லொஸ்லியா, தனது அப்பாவான சேரனை எலிமினேட் லிஸ்ட்டுக்கு நாமினேட் செய்திருக்கிறார்.

 

இது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல சேரனுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லொஸ்லியாவை மகள் என்று கூறி வந்த சேரன், திடீரென்று அவர் மீது கோபப்பட்டார். இதனால், அவர் நாடக் ஆடுகிறார் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் சமாதானம் ஆகி லொஸ்லியா மீது அன்பு செலுத்த ஆரம்பித்தார். லொஸ்லியாவும் சமாதானமாகி சேரனுடன் பழக தொடங்கினார்.

 

ஆனால், இன்றைய எப்பிசோட்டில் லொஸ்லியாவிடம் பிக் பாஸ் யாரை நாமினேட் செய்ய போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, சேரன் என்று கூறினார். மேலும், சேரனால் கடந்த சில நாட்களாக தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் லொஸ்லியா கூறுகிறார்.

 

லொஸ்லியா சேரனை நாமினேட் செய்யும் போது, அவள் என்னை கண்டிப்பாக நாமினேட் பண்ண மாட்டாள், என்று சேரன் கஸ்தூரியிடம் கூறிக்கொண்டிருக்கிறார்.

 

Cheran and Kasthuri

 

சேரன் நடத்திய அப்பா - மகள் நாடகம் இன்றுடன் முடிவுக்கு வந்ததாகவும், லொஸ்லியா சேரனுக்கு சரியான பாடம் கற்பித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

Related News

5503

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery