கடந்த வாரம் பிக் பாஸில் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்தாலும், தவறு செய்ததற்காக மதுமிதாவும், எலிமினேஷன் ரவுண்ட் மூலம் அபிராமியும் வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து, இந்த வாரத்திற்கான எலிமினேட் நாமினேஷன் நேற்றைய எப்பிசோட்டில் நடைபெற்றது. இதில் யாரும் ஏன் சேரனே எதிர்ப்பார்க்காத நிலையில், அவர் பெயரை லொஸ்லியா நாமினேட் செய்தார்.
அந்த வகையில், இந்த வாரத்திற்கான எலிமினேட் பட்டியலில் சேரன், தர்ஷன், சாண்டி மற்றும் கஸ்தூரி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், சாண்டி மற்றும் தர்ஷன் நாமினேட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனால், இவர்கள் இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இருந்து எஸ்கேப் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், சேரன், கஸ்தூரி இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும், லொஸ்லியா விவகாரத்தில் சேரன் நடிப்பதோடு, அவரது நடிப்பு ரொம்ப ஓவராக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இதனால், சேரன் மீது ரசிகர்கள் கடுப்பில் இருப்பதை உணர்ந்த பிக் பாஸ், இந்த வாரம் சேரனை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வாரம் எந்த போட்டியாளரை எலிமினேட் செய்யலாம் என்ற ரசிகர்களின் விருப்பத்திற்கான வாக்கெடுப்பில் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில், சாண்டி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், தர்ஷன் இரண்டாம் இடத்திலும், சேரன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த கஸ்தூரி, குறைவான வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். எனவே, இந்த வாரம் கஸ்தூரி தான் எலிமினேட் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், இந்த வாரத்திற்கான எலிமினேட் நெருங்குவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால், வரும் நாட்களில் ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், எலிமினேட்டிலும் மாற்றம் ஏற்படும். எப்படி இருந்தாலும், இந்த வாரம் சேரன் அல்லது கஸ்தூரி இருவரில் ஒருவர் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...