கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன் 2’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்ற நிலையில், தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தற்போது சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் கமல் சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் விவேக் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமலின் ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் விவேக் நடித்திருந்தாலும், இருவருக்குமான காமினேஷன் காட்சி என்பது அப்படத்தில் ஒன்று கூட இல்லை. இதனால், விவேக்கின் 32 வருட சினிமா பயணத்தில் அவர் கமலுடன் சேர்ந்து நடிக்கவே இல்லை.
தற்போது அவர் ‘இந்தியன் 2’ படத்தில் நடிப்பது உறுதியானால், அவர் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...