நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மஞ்சு வாரியர்! - காப்பாற்றும்படி சகோதரர் கோரிக்கை
Tuesday August-20 2019

வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் அங்கிருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில்,  மலையாளப் படத்தின் படப்பிடிப்புக்காக இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 30 பேர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘கயாட்டம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர், அப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருக்கிறார். படக்குழுவினர் தங்கியிருக்கும் பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறதாம்.

 

சேட்டிலைட் தொலைபேசி மூலம் தனது சகோதரரிடம் பேசிய மஞ்சு வாரியர், தான் உள்ளிட்ட படக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதை தெரிவித்திருக்கிறார். மேலும், சில நிமிடங்களே அவரால் பேச முடிந்ததாகவும், அதற்குள் தொலைபேசி துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மஞ்சு வாரியரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, மஞ்சுவின் சகோதரர், மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு தகவல் கொடுக்க, அவர் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு தெரிவித்திருக்கிறார். தற்போது மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

 

மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியார் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருவதோடு, தனுஷின் ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5510

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery