பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று தற்போது வெளியேற்றப்பட்டிருக்கும் மீரா மிதுன், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது ஜோ மைக்கேல் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தால் அவரிடம் இருந்து மிஸ்.சவுத் இந்தியா பட்டமும் திரும்ப பெறப்பட்டது.
இதற்கிடையே, அழகிப் போட்டி நடத்துவதாக கோசடி செய்த மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே போலீஸ் அவரை விசாரித்தது. அங்கேயே அவர் கைது செய்யப்படுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், தன் மீது போலீசில் புகார் அளித்த ஜோ மைக்கேல் என்பவரை கொலை செய்ய மீரா மிதுன் திட்டம் போட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனது நண்பர் ஒருவரிடம் போனில் கோபமாக பேசும் மீரா மிதுன், “ஜோ மைக்கேல் கால், கையை உடைத்து ஆறு மாதங்கள் பெட்டில் போட்டுவிடலாமா அல்லது கொலை செய்து விடலாமா, அப்போது தான் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும்” என்று கூறுகிறார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே சில வழக்குகளை எதிர்கொண்டு வரும் மீரா மீதுன், இந்த போன் உரையாடல் மூலம் பெரிய அளவில் சிக்கலில் சிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து போலீசில் ஜோ மீண்டும் புகார் அளித்தால், கொலை முயற்சி வழக்கில் மீரா மிதுன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த ஆடியோ மீரா மிதுன் பேசியது தானா, என்பதில் இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. யாராவது அவரது எதிரிகள் அவரை பிரச்சினையில் சிக்க வைக்க, இதுபோன்ற வேலையை பார்த்தார்களா என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை நடத்தினால் தான் இந்த விவகாரத்தின் உண்மை தெரிய வரும்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...