பணத்திற்காக பிக் பாஸ் குழுவை மிரட்டிய மதுமிதா! - போலீஸ் புகாரின் முழு பின்னணி
Wednesday August-21 2019

பிக் பாஸ் வீட்டில் மட்டும் இன்றி, வெளியே வந்ததும் கூட மதுமிதாவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயன்றதாக கூறி வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது விஜய் டிவி தரப்பில் இன்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

 

புகாரில் மதுமிதா தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புகாரின் முழு பின்னணியும் தற்போது தெரிய வந்துள்ளது.

 

பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியே செல்லும் போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கனவே ரூ.11.50 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் ரூ.80,000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக விஜய் டிவி நிர்வாகம் கூறியிருக்கிறது. அப்போது அதற்கு ஒப்புக்கொண்ட மதுமிதா, திடீரென்று கடந்த 19 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இன்னும் இரண்டு நாட்களில் பாக்கி பணத்தை தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன், என்று மிரட்டியுள்ளார்.

 

மேலும், இது குறித்து நடிகை மதுமிதாவிடம் கேட்டதற்கு, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால், தனக்கு தர வேண்டிய நிலுவை தொகையை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்ட ரீதியாக எதிர் கொள்வேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related News

5514

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery