கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியாளரான காமெடி நடிகை மதுமிதா பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயன்றதோடு, வெளியே வந்ததும், பணத்திற்காக விஜய் டிவி நிர்வாகத்தை தற்கொலை செய்துகொள்வதாக கூறி மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக விஜய் டிவி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன், என்று கூறிய மதுமிதா, இதற்கெல்லாம் கமல்ஹாசன் தான் காரணம், என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளரான முகேன் மீது அபராதம் விதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, பிக் பாஸ் போட்டியில் பங்கேற்வர்களிடம் போடப்படும் அக்ரிமெண்டில், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும், என்றும் குறிப்படப்பட்டுள்ளதாம். எனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அபிராமி காதல் விவகாரத்தில் கட்டிலை உதைத்த முகேன் மீதும் பிக் பாஸ் கமல் அபராதம் விதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த அபராத விவகாரத்தை பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் டேனி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும், அபராதம் ரூ.50 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை போடப்படும், என்றும் அக்ரிமெண்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...