Latest News :

பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்குவேன்! - பிரபல இயக்குநர் ஆவேசம்
Thursday August-22 2019

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தினம் ஒரு சர்ச்சை எழுந்து வருகிறது. மதுமிதாவின் தற்கொலை சர்ச்சை அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் தொடரும் நிலையில், பிரபலங்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பேச தொடங்கியிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், பிரபல இயக்குநர் அமீர், நான் நினைத்தால் பிக் பாஸ் வீடு இருக்கும் ஸ்டியோவை அடித்து நொறுக்கிடுவேன், என்று ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் நடிகர் சரவணன் மூலம் இயக்குநர் சேரன் அவமரியாதை செய்யப்பட்டார். நடிகர் சரவணன் சேரனை ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர்க பலர் சரவணனுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பிக் பாஸ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சேரனை காப்பாற்றுவோம், என்றும் கூறினார்கள்.

 

இயக்குநர்களின் எதிர்ப்பையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால், அதற்கு காரணமாக வேறு ஒன்றை சொல்லி பிக் பாஸ் மழுப்பினார்.

 

இந்த நிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் அமீர், ”மக்கள் அனைவரும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டது போல் தெரிகிறது. ஆனால், எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றி பேசும்போதெல்லாம் கோபமாக வருகிறது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. ஆனால், சமீபத்தில் என் நண்பர் ஒரு வீடியோவை காண்பித்து அதை கண்டிப்பாக பார்க்க சொன்னார். அந்த வீடியோவில், நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் சேரனை, ஒருமையில் திட்டுகிறார். இன்னொரு பெண், அவர் என்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று புகார் சொல்கிறார். இதைக்கேட்டு துடித்துப்போன சேரன் கண்ணீர் வடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குள் ஆத்திரம் பொங்குகிறது.

 

நான் நினைத்தால் பிக் பாஸ் வீடு இருக்கும் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கி அங்கிருந்து சேரனை அழைத்துக்கொண்டு வந்திருப்பேன், ஆனால் அதை செய்யாமல் நான் அமைதிக்காத்து வருகிறேன். எனக்கு பிடிக்காத டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்.” என்று ஆவேசமாக கூறினார்.

 

Director Ameer

 

ஏற்கனவே தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகை மதுமிதா மீது விஜய் டிவி தரப்பு போலீசில் புகார் அளித்திருக்கும் நிலையில், தற்போது இயக்குநர் அமீர், பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்குவேன், என்று கூறியிருப்பதால் அவர் மீது விஜய் டிவி தரப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசில் புகார் அளிக்குமா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Related News

5517

’கிங்டம்’ படத்திற்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா!
Tuesday July-29 2025

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

Recent Gallery