பிக் பாஸ் சீசன் 3 60 நாட்களை கடந்து விட்டது. போட்டியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நாளை வெளியேறப்போகிறார். அது யார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மேலும், தற்போது எலிமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கஸ்தூரி, சேரன், சாண்டி, தர்ஷன் ஆகியோரில் கஸ்தூரி தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். அது அவர்கள் அளிக்கும் வாக்குகளியேயே தெரிந்துவிடுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் சற்று ஓவராக ரியாக்ட் செய்யும் போட்டியாளர்களை வெளியேற்றி வரும் பிக் பாஸ் இந்த வாரம் கஸ்தூரியை தான் வெளியேற்ற போகிறார் என்று கூறப்படுகிறது. காரணம், கஸ்தூரியின் நடவடிக்கை அனைத்தும் கிரியேட் செய்வது போல இருப்பதோடு, அவர் செய்வதை மக்கள் யாரும் ரசிக்கவில்லை. இதனால், கஸ்தூரி வீட்டில் தேவையில்லாத நபராக இருக்கிறார். வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களும் கஸ்தூரி கண்டுக்கொள்ளாமல் இருப்பதாலும், அவரால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது.
எனவே, இந்த வாரம் கஸ்தூரி வெளியேறிவிட்டால், ஷெரின், வனிதா, சேரன், தர்ஷன், முகேன், கவின், சாண்டி, லொஸ்லியா என 8 போட்டியாளர்கள் இருக்க, வனித தனது ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி வனிதா ஆட்டத்தை ஆரம்பத்தால் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கிவிடும். தற்போது வனிதா அமைதியாக இருப்பதற்கு கஸ்தூரியும் ஒரு காரணம், என்பதால் இந்த வாரம் கஸ்தூரி தான் பிக் பாஸ் வீட்டை காலி செய்யும் நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...