’விஸ்வாசம்’ செய்த புது சாதனை! - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
Saturday August-24 2019

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தாலும், நான்காவதாக வெளியான ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இப்படம், வசூல் ரீதியாக பல சாதனைகள் புரிந்த நிலையில், தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.

 

அதாவது, ட்விட்டரில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அதிக ஹஸ்டேக்குகளை பயன்படுத்திய வார்த்தை என்றால் அது விஸ்வாசம் தான். உலகக்கோப்பை கிரிக்கெட், பாராளுமன்ற தேர்தல் என்று இந்த காலகக்கட்டத்தில் பல விஷயங்கள் டிரெண்டிங் ஆனாலும், விஸ்வாசம் தான் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பிடித்திருக்கிறது.

 

ஏற்னவே, தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் மட்டும் ரூ.200 கோடி வசூலித்த ஹீரோ என்று அஜித், யாரும் செய்யாத சாதனையை செய்திருக்கும் நிலையில், ‘விஸ்வாசம்’ மூலம் அவர் படைத்திருக்கும் இந்த புதிய சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related News

5528

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery