சஸ்பென்ஸ் த்ரில்லருக்காக மீண்டும் சத்யராஜுடன் இணையும் சிபிராஜ்!
Saturday August-24 2019

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிபிராஜ், கதை தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார். தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் எப்படிப்பட்ட விஷயங்களை ஏற்றுக்கொள்வார்கள், என்பதில் தெளிவாக இருக்கும் சிபிராஜ், தனது அடுத்த படத்தை வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.

 

’ஜாக்சன் துரை’ என்ற திகில் படத்தில் இணைந்து நடித்த சத்யராஜ் - சிபிராஜ், தற்போது இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

 

சிபிராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சத்யா’ படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிங் எண்டர்டெய்னர் சார்பில் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்கள்.

 

சிபிராஜ், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு சைமன் கே.சிங் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

Sathyaraj and Sibiraj

 

வரும் நவம்பரில் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று ஜனவரியில் முடிக்கும் விதமாக படக்குழு திட்டமிட்டுள்ளார்கள்.

Related News

5529

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery