தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக உயர்ந்துள்ள ‘மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாணிக். அறிமுக இயக்குநர் மார்டின் இயக்கியுள்ள இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி விஷால் வெளியிட உள்ளார். அன்றைய தினம் தான் அவரது ‘துப்பறிவாளன்’ படமும் ரிலிஸாகிறது.
இப்படத்தில், மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடிகாக, ‘எதிர் நீச்சல்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்த சூசா குமார் நடித்திருக்கிறார். தரண் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மோஹிதா சினி டாக்கீஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஷால் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடுகிறார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...