முன்னாள் முதல்வர்களும், நடிகர்களுமான மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு மேக்கப் மேனாக பணியாற்றிய பத்மநாபன் என்பவர் சாலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
85 வயதாகும் பத்மநாபன், பாலக்காட்டை அடுத்துள்ள ஒற்றபாலம் அம்பலபாறை புளியகுன்னு பகுதியில் வசித்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று, தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சாலை ஓரத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பத்மநாபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...