வித்தியாசமான பரிமாணத்தில் உருவாகும் ‘தேடு’
Monday August-26 2019

கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில்,  சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் ‘தேடு’.

 

கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் இப்படம், முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதை களத்துடன் ரசிகர்களை ஈர்க்க தயாராகி வருகிறது.

 

இணைய தலைமுறை திரைப்படத்தை இயக்கிய சுசி. ஈஸ்வர் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

 

கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, 'உறுதிகொள், வீராபுரம்' ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார்.

 

மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது.  மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.

 

இவர்களோடு இணைந்து சிவகாசி முருகேசன், விஜய் டிவி 'கலக்கப் போவது யாரு?' புகழ் பிரபாகரன், ராணி,  கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பை கவனிக்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத 

டி.ஜே.கோபிநாத் இசையமைத்து பாட, வேல்முருகன், மற்றும் பூர்ணிமாவும் இப்படத்தில் பாடியிருக்கிறார்கள். எஸ் ஆர் முருகன் சண்டை பயிற்சிக்கும், கம்பு முருகன் நடனத்திற்கும் பொறுப்பேற்க, வடிவமைப்பு சசி & சசி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

5542

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery