மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாட்டில் பலர் குரல் கொடுத்து வர, பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி, மாட்டுக் கறிக்கு ஆதரவாக பேசி பிரச்சினையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற சுரபி லட்சுமி, தனது பேஸ்புக் பக்கத்தில் வாழை இலையில் சாதம் பரிமாறி கறி விருந்து சாப்பிடுவதுபோல் புகைப்படம் வெளியிட்டிருந்தார். மேலும், கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் கிடைக்கும் மாட்டிறைச்சி தனக்கு மிகவும் பிடித்த உணவு என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
சுரபியின் இந்த பதிவுக்கு லைக் போட்டது போல பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அதில் ஒருவர், “உங்கள் செலவில் நீங்கள் எந்த அழுக்கான செயலையும் செய்யலாம். அதை நாங்களும் பார்க்க வேண்டுமா?” என கூற, அவருக்கு அதிரடியாக பதளித்த சுரபி, “பசி என்பது அடிப்படை உணர்வு. நான் எப்போதெல்லாம் பசியாக இருக்கிறேனோ அப்போது நான் சாப்பிடப்போவது மாட்டு கறியா, கோழியா அல்லது பன்றிக்கறியா என்று கணக்கு பார்ப்பதில்லை. இந்த விவகாரம் நான் மாட்டு கறி சாப்பிட்டதால் வந்தது அல்ல. பண்டிகை நாளில் படம் வெளியானதால் வந்த பிரச்சினை என்று தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...