Latest News :

காமெடியும், திகிலும் கலந்த படமாக உருவாகியுள்ள ‘மல்லி’
Thursday August-29 2019

முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் ‘மல்லி’.

 

ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். 

 

ஒளிப்பதிவு - PKH தாஸ், இசை - பஷீர், பாடல்கள் - சிதம்பரநாதன், பாண்டிதுரை, எடிட்டிங் - B.S.வாசு, நடனம் - நாகேந்திர பிரசாந்த், சுரேஷ், ஸ்டன்ட் - ஸ்டன்ட் சிவு, தயாரிப்பு - ரேணுகா ஜெகதீஷ், கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் - வெங்கி நிலா.

 

படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள்.அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை  ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.

 

மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? - எப்படி? - அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும்.  இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவு பதில் சொல்லும். முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாச கோணத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. மல்லி விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது.” என்றார்.

Related News

5556

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆன்மீக திரைப்படம் ‘ராகு கேது’!
Monday July-28 2025

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...

Recent Gallery