‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், உதயநிதியின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வரும் அவர் மேலும் சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் நடிகர்களிடம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். அது என்ன பயிற்சி என்று அவரிடம் விலாவரியாக கேட்டதற்கு, நடிப்பு பயிற்சி தான், என்று வெட்கத்தோடு சொல்கிறார்.
தற்போது நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் படங்களில் அவரத் நடிப்பு பாராட்டு பெறுமாம். அதற்கு காரணம், அவர் பார்த்திபன் மற்றும் ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் அவருக்கு அவ்வபோது நடிப்பு பயிற்சி கொடுத்தார்களாம். அதனால், அவர் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும் அளவுக்கு தனது படங்களில் தனது நடிப்பு திறமையை கொட்டியுள்ளாராம்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...