அஜித் படங்களில் இனி இந்த விஷயங்கள் இருக்காதாம்!
Friday August-30 2019

‘விஸ்வாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என தொடர்ந்து இரண்டு மெகா ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் அஜித் தற்போது தனது புதிய படத்திற்கான பணிகளில் இறங்கிவிட்டார். அஜித்தின் 60 வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

 

இதற்கிடையே, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் அவரது மகள் அனோஷ்காவுக்கு ரொம்பவே பிடித்திருப்பதோடு, ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் அஜித்துக்கு பெண் ரசிகர்கள் அதிகமாகியிருக்கிறார்களாம். இதனால், அஜித் தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

 

அதாவது, இனி தான் நடிக்கும் படங்களில் பெண்களை கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் அந்த முடிவாம்.

 

ஹீரோக்கள் பெண்களை கிண்டல் செய்யவில்லை என்றாலும், அவர்களது நண்பர்களாக வரும் காமெடி நடிகர்கள் பெண்களை கிண்டல், கேலி செய்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்ற காட்சிகள் கூட தனது படங்களில் இருக்க கூடாது, என்று இயக்குநர்களிடம் அஜித், கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாராம்.

 

ஆக, இனி அஜித் படத்தில் தாய்க்குலங்களை தரக்குறைவாக பேசுவது, கிண்டல் செய்வது போன்ற வசனங்களும், காட்சிகளும் இடம்பெறாது.

Related News

5561

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery