Latest News :

சயின்ஸ் பிக்‌ஷன் கதைக்காக மூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானம்!
Saturday August-31 2019

’தில்லுக்கு துட்டு 2’, ‘A1' என தொடர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம், தனது நடிப்பு பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். தனது அடுத்தப் படத்திற்காக சயின்ஸ் பிக்‌ஷன் கதையோடு களம் இறங்கும் சந்தானம், அப்படத்திற்காக மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்.

 

இதுவரை உள்ள சந்தானம் காமெடியில் இது தான் உச்சம், என்று சொல்லும் விதத்தில் இப்படம் உருவாக உள்ளதாம். கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ‘அறம்’, ’குலேபகாவலி’, ’ஐரா’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் இவர், சிவகார்த்திகேய நடிப்பில் ‘ஹீரோ’, விஜய் சேதுபதி நடிப்பில் ‘க.பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும், ‘விஸ்வாசம்’ படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட்டவரும் இவர் தான். இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ்.சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இவர், ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர். 

 

இப்படத்தின் தலைப்பு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதோடு இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான்.  

கார்த்திக் யோகி தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர். இப்படக்குழுவினர் இது மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேறலெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். 

 

முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களோடும், நடிகர்கள் கூட்டணியோடும் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இப்படத்தை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.

Related News

5564

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆன்மீக திரைப்படம் ‘ராகு கேது’!
Monday July-28 2025

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...

Recent Gallery