2010 ஆம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார், முதல் படத்திலேயே பல பாராட்டுக்களை பெற்றாலும், அப்படத்திற்கு பிறகு ஆளே காணாமல் போனவர், தற்போது 8 வருடங்களுக்கு பிறகு ‘மகாமுனி’ படத்துடன் மீண்டும் வந்திருக்கிறார்.
ஆர்யாவின் சினிமா வாக்கையில் இந்த ‘மகாமுனி’ முக்கியமான படமாக இருக்கும், என்பது படத்தின் போஸ்டர் மற்றும் டீசரிலேயே தெரிகிறது.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படம் இன்று, நேற்று ஆரம்பித்தது அல்ல, கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தொடங்கியதாம். ஆம், ‘மெளனகுரு’ படத்தை பார்த்துவிட்டு சாந்தகுமாரை வைத்து படம் தயாரிக்க நினைத்த ஞானவேல்ராஜா, அவருக்கு அட்வாஸ் கொடுத்துவிட்டு 8 வருடங்களாக காத்திருந்திருக்கிறார். அதாவது, இயக்குநர் சாந்தகுமார் ‘மகாமுனி’ படத்தை 8 வருடங்களாக உருவாக்கியிருக்கிறார்.
ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய அட்வான்ஸில் ஒரு பைக் வாங்கிய இயக்குநர் சாந்தகுமார், அதில் இந்தியா முழுவதும் சுற்றிவர சென்றுவிட்டாராம். இதனால் தான் ‘மகாமுனி’ கதை எழுத இத்தனை ஆண்டுகள் ஆனதாக ஆர்யா, பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
ஆனால், தான் எழுதும் கதை தனது வாழ்க்கையையும் சார்ந்ததாக இருப்பதாலேயே இந்த கதை இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக தெரிவித்திருக்கும் இயக்குநர் சாந்தகுமார், இந்த 8 வருடங்களில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை என் மனையும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் அறிவார்கள், என்றார்.
மேலும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாந்தகுமாருக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்காமல் அவரை சுதந்திரமாக விட்டதாலும் தான், ‘மகாமுனி’ உலகத்தரம் வாய்ந்த படமாக உருவாகியுள்ளது.
இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படம் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...