இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அதை போட்டியாளர்களுக்கு தெரியப்படுத்தாத பிக் பாஸ் இன்றைய எப்பிசோட்டில் ட்விஸ்ட் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
இன்றைய எப்பிசோட்டில் பார்வையாளர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து எலிமினேஷன் குறித்து பேசப்படுகிறது. இதனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று போட்டியாளர்கள் நினைக்கிறார்கள்.
மேலும், கமல்ஹாசனுக்கு தெரியாமலே அவருக்காக ஒரு குறும்படம் ஒளிபரப்பபடுகிறது. இந்த குறும்படம் தான் ட்விஸ்ட்டே. ஒரு நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தால் பெரும் பரபரப்பும் ஏற்படுகிறது.
இதை தொடர்ந்து சேரன், லொஸ்லியா அப்பா, மகள் உறவு குறித்து காரசாரமான விவாதம் நடக்க லொஸ்லியா கண்ணீர் விட்டு அழுகிறார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...