பிக் பாஸ் வீட்டை பரபரப்பாக வைத்திருப்பதில் நம் ஒன்னாக திகழும் வனிதா, கவினுடன் மல்லுக்கட்டிய விவகாரம் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது. சமாளிக்க முடியாத கவின், கதவை திறந்து வையுங்கள், இப்போதே வெளியே போகிறேன், என்று கூறியதோடு கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த நிலையில், மீண்டும் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டும் வகையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் விரைவில் வருகிறார்கள்.
அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆய மூவர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், அபிராமி மற்றும் சாக்ஷி வருவது உறுதியாகியுள்ளது. ஒரு வாரம் பிக் பாஸ் வீட்டில் விருந்தினர்களாக இவர்கள் தங்க இருக்கிறார்கள்.
இதனால், முகேன், அபிராமியின் காதல் விவகாரமும், சாக்ஷி, கவினின் மோதல் விவகாரமும் சூடு பிடிக்கும் என்பதால், இனி பிக் பாஸ் வீடே ஒரு கலவர ஏரியாவாக காட்சியளிக்கப் போவது உறுதி.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...