முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் பிக் பாஸ் லொஸ்லியா!
Tuesday September-03 2019

பிக் பாஸ் மூன்றாவது சீசன் 70 நாட்களை கடந்து முக்கியமான கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. தற்போது, சேரன், லொஸ்லியா, தர்ஷன், முகேன், சாண்டி, வனிதா, ஷெரின் ஆகிய 7 பேர் வீட்டுக்குள் இருக்க, இந்த வாரம் கவின் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்து விடும். அதே சமயம், கவின் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே, சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டாலும், நேற்று முன் தினம் இந்த தகவலை பிக் பாஸ் வீட்டில் வைத்து சேரன் உறுதி செய்திருக்கிறார்.

 

வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இப்படத்தின் மூலம் தனது கம்பேக் ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கும், என்றும் சேரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

 

Cheran and Vijay Sethupathy

 

இந்த நிலையில், சேரன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் லொஸ்லியா தான் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே, அவர் கவினின் காதலை ஏற்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வாரம் கவின் வெளியேறிவிட்டால், லொஸ்லியாவுக்கு காதல் பிரச்சினை இருக்காது என்றும், நிகழ்ச்சி முடிந்த உடன் அவர் எந்தவித கமிட்மெண்டும் இல்லாமல் சினிமாவில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப் போவது பிக் பாஸ் வீட்டில் கூறிய சேரன், லொஸ்லியாவை ஹீரோயினாக நடிக்க வைக்கப் போவதையும் இதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே அறிவிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

5569

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery