அஜித்தின் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ படம் இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதேபோல், இந்த படத்தில் அஜித் தான் நடிக்க ஆசைப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததுதான். தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கும் அஜித், அப்படத்திற்குப் பிறகு, அதாவது அவரது 61 வது படம் குறித்து தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்.
அதன்படி, அஜித்தின் 61 வது படமும் ரீமேக் படமாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் விருது பெற்ற இந்தி படமான ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தை ரீமேக் செய்து நடிக்க அஜித் விரும்புகிறாராம். இப்படத்தின் உரிமையும் போனி கபூரிடம் இருப்பதால், உரிமையை வாங்க எந்த பிரச்சினையும் இல்லையாம். மேலும், போனி கபூரிடம் இருந்து வேறு ஒரு தயாரிப்பாளர் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று அஜித்துக்காக தயாரிக்க இருக்கிறாராம்.
இப்படம் அஜித்தின் இமேஜுக்கு சரியாக இருப்பதோடு, வித்தியாசமான கதையாக இருப்பதால், நிச்சயம் ‘நேர்கொண்ட பார்வை’ போல பெரிய வெற்றி பெறும் என்று பலர் கருத்து தெரிவித்திருப்பதால், அஜித்தும் இப்படத்தில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 60 வது படத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்திற்கு பிறகு தனது 61 வது படமாக ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தில் நடிப்பதோடு, அதை வெங்கட் பிரவை இயக்க வைப்பார் என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...