‘வெண்ணிலா கபடி குழு’ மூலம் காமெடி நடிகராக பிரபலம் அடைந்த அப்புகுட்டி, ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படத்திற்கு பிறகு தொடர்ந்து காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வந்த அப்புகுட்டி, மீண்டும் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
‘வாழ்க விவசாயி’ என்ற தலைப்பில் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அப்புகுட்டி தான் கதையின் நாயகி. அவருக்கு ஜோடியாக, அதாவது படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?, கிராமத்து கதை என்றாலே இவர், டக்கென்று நினைவுக்கு வரும் வசுந்தரா தான்.
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘கண்ணே கலைமானே’ சமீபத்தில் வெளியான ‘பக்ரீத்’ என்று தொடர்ந்து கிராமத்து கதைகளில் நடித்து வரும் வசுந்தராவுக்கு பழக்கப்பட்ட ஒரு வேடம் தான் இந்த ‘வாழ்க விவசாயி’ படத்திலும் கிடைத்திருக்கிறது. அப்புகுட்டிக்கு மனைவியாக, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறாராம்.
அப்புகுட்டிக்கும், வசுந்தராவுக்கும் இப்படம் திருப்புமுனையாக அமையும் விதத்தில் வந்திருப்பதோடு, இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியாக அனைவரையும் பதற வைத்திருக்கிறது.
அதாவது, பரணில் கதாநாயகியும், கதாநாயகனும் அமர்ந்துக் கொண்டு பேசுவது போன்ற காட்சியை படமாக்க வேண்டுமாம். அதற்காக கலை இயக்குநர் பரண் ஒன்றை செட் போட்டிருக்கிறார். முதலில் அப்புகுட்டி அந்த பரணியில் ஏற, அடுத்ததாக வசுந்தரா ஏறியிருக்கிறார். அப்போது பரண் சரிந்து விழ, முதலில் அப்புகுட்டி கீழே விழ, அவர் மீது வசுந்தரா விழுந்திருக்கிறார். ஆபத்துக்கு பாவம் இல்லை, என்று அவரை அப்புகுட்டி இறுக்கி அணைத்துக் கொண்டாராம். பிறகு பயந்தவாரே இருக்க, அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்ட வசுந்தரா, “உங்க மேல விழுந்திருக்காவிட்டால் அதிகமாக அடிபட்டிருக்கும்” என்றாராம்.
பி.எல்.பொன்னிமோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜெய்கிருஷ்.கே இசையமைக்க, கே.பி.ரதன் சந்தாவத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பா.பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பு செய்ய, ஆர்.சரவண அபிராமன் கலையை நிர்மாணித்திருக்கிறார். காதல் கந்தாஸ் நடனம் அமைத்திருக்கிறார். யுகபாரதி, மணி அமுதவன், தமயந்தி ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
முடியும் தருவாயில் இருக்கும் இப்படத்தை பால் டிப்போ கே.கதிரேசன் தயாரித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...