பிகினி புகைப்படங்களை வெளியிட்ட நிகிஷா படேலுக்கு நேர்ந்த சோகம்!
Wednesday September-04 2019

தமிழ், தெங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நிகிஷா படேல், தற்போது சரண் இயக்கத்தில் பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு குறைவான பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது பெயர் ஊடகங்களில் இடம்பெற செய்துவிடுவார்.

 

அதிலும், பிகினி உடையில் ரொம்ப ஹாட்டாக புகைப்படங்களை வெளியிடுவதில் நிகிஷா படேலை அடித்துக்கொள்ள ஆளே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு விதவிதமான பிகினி டிரெஸ்களைப் போட்டுக்கொண்டு, நீச்சள் குளம் மற்றும் கடற்கரையில் படுத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்களை அதிகமாக வெளியிடுவார்.

 

அந்த வகையில், நிகிஷா படேல் சமீபத்தில் ஆரஞ்ச் வண்ணத்தில் பிகினி உடை அணிந்துக் கொண்டு கடற்கரையில் படுத்தபடியே எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படங்களை வெளியிட்ட நிகிஷாவும் ரொம்பவே குஷியான நிலையில், அடுத்தபடியாக அவருக்கு ஒரு சோக சம்பவம் நடந்திருக்கிறது.

 

அதாவது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிகிஷா படேல், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தெலுங்கு முன்னணி ஹீரோ பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அந்த ட்வீட்டில் அவர் தவறான ஹஸ் டேக் பயன்படுத்தியிருந்தார். இதை கவனித்த பவன் கல்யாண் ரசிகர்கள், நிகிஷா பட்டேலை வைத்து செய்ய தொடங்கிவிட்டார்கள்.

 

அவர் தவறான வார்த்தையை பயன்படுத்தியதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள், அதன் மூலம் பல வகையான ட்ரோல் செய்ய, கடுப்பான நிகிஷா, ட்வீட்டர் பக்கத்தை விட்டே வெளியேறுவதாக அறிவித்துவிட்டார்.

 

Nikesha Patel

Related News

5573

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery