பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகியிருக்கிறார்கள். அவர்களின் வருகையால் ஷெரின் ரொம்பவே சந்தோஷமடைந்தாலும், அவர்களது வருகையை விரும்பாத ஒருவராக கவின் இருக்கிறார்.
இதற்கு காரணம், லொஸ்லியாவுடனான காதல் தான். சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, லொஸ்லியாவுடன் நட்பாகத்தான் பழகி வருகிறேன், என்று கூறி வந்த கவின், தற்போது அவரை காதலிப்பதோடு, அதை வெளிப்படையாக கூறிவிட்டார்.
ஆனால், வெளியே இருந்த சாக்ஷி அனைத்தையும் கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதால், இந்த விஷயத்தை வைத்தே கவினை காலி பண்ண பிளான் போட்டுவிட்டார். அத்துடன், தான் ஜெயிக்க வேண்டும் என்றால், அதற்கு எதிராக இருப்பவர்களை ஓரம் கட்டுவதில் கவின், புத்திசாலித்தனமாக விளையாடுகிறார். நேற்றைய எப்பிசோட்டில் ஷெரினிடம் பேசும்போதே அதை அவர் ஒப்புக்கொண்டார். ஷெரின் தான் அவருக்கு கடுமையான போட்டியாக இருப்பதாகவும், அதனால் தான் அவரை வெளியேற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்ததாகவும் அவரே கூறினார்.
இந்த நிலையில், தனது நெருங்கிய தோழியான சாக்ஷி, மீண்டும் வீட்டுக்குள் வந்ததால் உற்சாகமடைந்திருக்கும் ஷெரினுக்கு ஏற்கனவே வனிதாவின் நட்பு இருப்பதால் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கவினை காலி செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வார எலிமினேஷனில் கவின், லொஸ்லியா, சேரன், முகேன், ஷெரின் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றாலும், கவினின் களவாணி ஆட்டம் குறித்து புரிந்துக்கொண்ட மக்கள் அவர் பிக் பாஸ் போட்டியில் தொடர்வதை விரும்ப மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. அதே சமயம், கவினுக்கும், வனிதாவுக்கும் இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை நெருங்குவது நிகழ்ச்சியின் பரபரப்புக்கு உதவியாக இருப்பதால், அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் விரும்பினால் கவின் காப்பாற்றப்படுவதோடு, அவருக்கு பதிலாக முகேன் அல்லது ஷெரின் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, இனி வரும் நாட்களில் வனிதாவும், ரீ எண்ட்ரியாகியிருக்கும் சாக்ஷியும் வச்சி செய்யப் போவது மட்டும் உறுதி.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...