விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘துப்பறிவாளன்’ வரும் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 350 க்கு மேற்பட்ட திரையரங்கங்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் முதல் முறையாக நடித்துள்ள விஷால், எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு இப்படத்தில் ரொம்ப ஸ்டைலிஷாக நடித்திருப்பதோடு, தனது வழக்கமான நடிப்பு பாணியை முற்றிலும் மாற்றி, நடப்பிலும் தனது உடல் மொழியிலும் வித்தியாசத்தை காண்பித்துள்ளாராம். விஷாலுடன் பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் வினயும், பாக்யராஜும் வில்லன்களாக நடித்துள்ளார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, விஷால் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் ‘வில்லன்’ படமும் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் விஷால் தான் வில்லன். கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில் ஹன்சிகா, மஞ்சு வாரியார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதன் மூலம், ஒரே மாதத்தில் தான் நடித்த இரண்டு படங்கள் மூலம் ஹீரோவாகவும், வில்லனாகவும் களம் இறங்குகிறார் விஷால்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...