Latest News :

சினிமாவால் தடம் புரண்ட வாழ்க்கை! - ஓட்டல் சப்ளையரான பிரபல சீரியல் நடிகர்
Thursday September-05 2019

சினிமாவுக்கு நிகராக தொலைக்காட்சி சீரியல்களும் தற்போது மக்களிடம் வரவேற்பு பெறுவது போல டிவி நகர்களும் மக்களிடம் பிரபலமாக இருப்பதோடு, சிலர் வெள்ளித்திரையில் நுழைந்து பெரிய அளவில் வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வகையில், சீரியலில் பிரபலமாக இருந்த நடிகர் ஒருவர் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றி பெற நினைத்தவர், தற்போது தனது வாழ்க்கையை தொலைத்து தடுமாறிக் கொண்டிருக்கிறாராம்.

 

அவர் வேறு யாருமல்ல, ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் இர்பான் தான். கனா காணும் காலங்கள் சீரியலை தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி சினிமா பக்கம் தாவினார். ’பள்ளி பருவங்கள்’, ‘சுண்டாட்டம்’, உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு சினிமா தொடர்ந்து கைகொடுக்காமல், அவர் நினைத்த இடத்தை பிடிக்க முடியாமல் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது சொந்த செலவுக்கே பணம் இல்லாமல் தடுமாறிய இர்பான், ஓட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றியிருக்கிறார். முகத்தை மறைத்துக் கொண்டு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்தவரை, கஷ்ட்டமர் ஒருவர் பார்த்து அடையாளம் தெரிந்துக் கொள்ள, அங்கிருந்து அழுதுக்கொண்டே ஓடி வந்துவிட்டாராம்.

 

Actor Irfan

 

தற்போதும் நடிக்க இர்பானுக்கு பல வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை தவிர்த்து வருகிறாராம். அதற்கு காரணம், சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது தான் அவரது லட்சியமாம். அதற்கான படிப்பை முடித்துவிட்டு சில குறும்படங்களை இயக்கியவர், யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், வாய்ப்பு தேட அவருக்கு கிடைத்தது நடிகருக்கான வாய்ப்பாம், சரி அதில் கொஞ்சநாள் டிராவல் பண்ணலாம் என்று நினைத்தவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க, இயக்குநர் கனவை நிறுத்தி வைத்துவிட்டு, ஹீரோவாக நினைத்தவருக்கு அங்கேயும் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியதோடு, சீரியலில் கிடைத்த வரவேற்பு கூட அவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லையாம்.

 

இதனால், இனி இயக்குநராவதே ஒரே லட்சியம் என்று பயணிக்கும் இர்பான், தற்போது 6 திரைக்கதைகளை முடித்துவிட்டு தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறாராம். அதற்கு முன்பு, வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.

Related News

5582

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரைபயணத்தை தொடங்குகிறார் அபாஸ்!
Friday July-25 2025

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...

‘கேப்டன் பிரபாகரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday July-25 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

’சக்தித் திருமகன்’ படம் மூலம் அரசியல் புரோக்கரான விஜய் ஆண்டனி!
Friday July-25 2025

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...

Recent Gallery