ஜெயலலிதா வேடத்திற்காக ரம்யா கிருஷ்ணன் வாங்கும் சம்பளம்! - அதிர்ச்சியில் கோலிவுட்
Friday September-06 2019

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க இயக்குநர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி என பல இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கிறார்.

 

ஆனால், இதை திரைப்படமாக எடுக்காமல் வெப்சீரிஸாக எடுக்கும் கெளதம் மேனன், ஜெயலலிதாவின் வேடத்தில் ரம்யா கிருஷ்ணாவை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் பள்ளி காலம், சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து சொல்லப்படும் இப்படத்தில், ஜெயலலிதாவின் மூன்று காலக்கட்டத்தில் நடிக்க மூன்று நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

அந்த வகையில், ஜெயலலிதா அரசியல் வாழ்க்கை காலக்கட்டத்தில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு எப்பிசோடுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் என்றால், அவர் 10 நாட்கள் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளமாம். ரம்யா கிருஷ்ணனின் இத்தகைய சம்பள தொகையை கேட்டு கோலிவுட்டே அதிர்ச்சியடைந்திருக்கிறது.

 

‘குயின்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா நடிக்கிறாராம். மற்றொரு நடிகைக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

Related News

5584

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery