விருந்தாளிகளின் விருதால் கடுப்பான லொஸ்லியா! - என்ன விருது தெரியுமா?
Friday September-06 2019

பிக் பாஸ் சீசன் 3 நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களில் இல்லாத சண்டையும், சர்ச்சைகளும் இந்த மூன்றாவத் சீசனில் அதிகம் என்பதால், நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 

இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் விருந்தாளிகளாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். இவர்கள் ஒருவாரம் பிக் பாஸ் வீட்டில் இருப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், இந்த மூன்று பேரும் போட்டி முடியும் வரை வீட்டுக்குள் இருந்து பலவிதமான ஆட்டங்களை நடத்த இருக்கிறார்கள் என்பது கடந்த சில நாட்களில் தெரிந்தது.

 

குறிப்பாக மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி இருவரும் பழிவாங்கவே மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதாக சாண்டி மற்றும் தர்ஷன் கூறிய நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக இந்த மூன்று ரிட்டர்ன் போட்டியாளர்கள் நடந்துக்கொள்கிறார்கள்.

 

அதாவது, அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் போட்டியாளர்களூக்கு விருது கொடுக்கிறார்கள். அதில் முதல் விருதாக லொஸ்லியாவுக்கு ‘பச்சோந்தி’ என்ற விருது வழங்குவதோடு, அவர் பச்சோந்தி போல போலியானவர், அதனால் தான் அவருக்கு இந்த விருது, என்று மோகன் வைத்யா கூற, விருதை சாக்‌ஷி அகர்வால் வழங்குகிறார். விருதை பெற்றுக்கொண்ட லொஸ்லியா, ”இந்த விருது தனக்கு வேண்டாம்” என்று கூறி அதை தூக்கி எரிகிறார். உடனே கோபமாகும் மோகன் வைத்யா, “உனக்கு வேண்டாம் என்றால் வெளியே தூக்கி எரி, இங்கே ஏன் எரியுரே” என்று கேட்க, அதற்கு லொஸ்லியா எனக்கு தேவையில்லை, என்று கூறுகிறார்.

 

Mohan Vaidya in Big Boss

 

உடனே விருது வழங்கும் நடுவராஜ சாக்‌ஷி, விருதை தூக்கி எரிபவர்களுக்கு எதற்காக நான் விருது வழங்க வேண்டும், என்று கூறி மேடையில் இருந்து கீழே இறங்குகிறார்.

 

இன்றைய எப்பிசோட்டில் இந்த விருது வழங்கும் நிகழ்வு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது நன்றாக தெரிய, மற்ற போட்டியாளர்களுக்கு இவர்கள் எந்தமாதிரியான விருது வழங்க இருக்கிறார்கள், என்பதும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

 

இதோ அந்த புரோமோ,

 

 

Related News

5585

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery