பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் வாணி போஜன். அதற்கு முன்பு மாடலிங் செய்து வந்த இவர், தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழகத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் பிரபலமாகிவிட்டார்.
தொடர்ந்து சில சில சீரியல்களில் நடித்த வாணி போஜனுக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக காத்திருந்தவர் கையில் தற்போது மூன்று படங்கள் இருக்கிறது. நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் வாணி, பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் மக்களிடம் அதிகம் பிரபலமாக இருக்கும் வாணி போஜனை சின்னத்திரைக்கு ‘சின்னத்திரை நயன்தாரா’ என்ற பட்டத்தை கொடுத்தார்கள். இது வாணிக்கு பெருமையாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில், அந்த பட்டத்தால் அவர் ரொம்பவே அப்செட்டாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட வாணி போஜனிடம், “சின்னத்திரை நயன்தாரா பட்டம் கொடுத்ததால், அவரைப்போலவே டிரெஸ் பண்றீங்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “எப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நான் எப்போதும் போல தான் டிரெஸ் பண்ணுகிறேன். அதுமட்டும் அல்ல, சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டம் தெரியாம கொடுத்துட்டாங்க, அத பத்தி பேசாதீங்க” என்று சிரித்தபடியே, கடுப்பாக பதில் அளித்தார்.
இதோ அந்த வீடியோ,
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...