Latest News :

விஜய் சேதுபதி அரவாணியாக நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’!
Tuesday September-12 2017

’ஆரண்ய காண்டம்’ என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய தியாகராஜ குமாரராஜா, அப்படத்திற்கு பிறகு படங்கள் ஏதும் இயக்கவில்லை என்றாலும், வெற்றி பெற்ற பல படங்களின் திரைக்கதையில் அவரது பங்கு பெரிதும் இருந்து வந்தது. மேலும், தனது படத்திற்கான பணிகளில் தீவிரமாக இயங்கி வந்த அவர், இன்று படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.

 

’சூப்பர் டீலக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு அரவாணி வேடமாம். மற்றூம் நதியா, பகத் பாசில், இயக்குநர் மிஸ்கின், சமந்தா, காயத்ரி, பகவதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் மற்றும் நீரவ்ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்கின்றனர். சத்யராஜ் படத்தொகுப்பு செய்யும் இப்படத்தின் கலை இயக்குநராக விஜயாதிநாதன் பணியாற்றுகிறார்.

 

மேலும், இப்படத்தின் இணை கதையாசிரியர்களாக நலன் குமாரசாமி, நீலம் சங்கர், மிஷ்கின் ஆகியோர் பணியாற்ற, கதை, திரைக்கதை, வசனம் எழுதி குமரராஜா இயக்க, டைலர் சுடன் மற்றும் கினோ பிட்ஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Related News

559

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery