தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேவயானி மற்றும் நடிகர் நகுல் ஆகியோரது அம்மா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் தேவயானி, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தம்பியான நகுல் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘கந்தகோட்டை’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘வல்லினம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது ‘எரியும் கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த நகுல் மற்றும் தேவயானியின் அம்மா லட்சுமி ஜெயதேவ், உடல் நிலை பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்தவர், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...