தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் இன்று மரணம் அடைந்தார்.
‘பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர், பல படங்களில் நடித்தும் இருக்கிறார். சினிமா மட்டும் இன்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.
ராபர்ட்டுடன் இவர் இணைந்து, ரபார்ட் - ராஜசேகர் என்ற பெயெரில், 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார்.
பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த ராஜசேகர் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததோடு, பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார்.
சமீபகாலமாக உடல் நலம் சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர், சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார்.
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...