விஜய் உதவியாளரின் அநாகரீக செயல்! - வருத்தத்தில் சீனியர் நடிகர்
Monday September-09 2019

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய், தனது மக்கள் மன்றம் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதோடு, தமிழகத்திற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார். இப்படி பல செயல்கள் மூலம் நல்ல பெயர் எடுத்து வரும் விஜய்க்கு, அவரது உதவியாளர்கள் அல்லது அவருடன் இருப்பவர்களால், அவ்வபோது கெட்டப்பெயரும் ஏற்படுகிறது.

 

சமீபத்தில் விஜயின் உதவியாளர் மூத்த நடிகர் ஒருவரிடம் அநாகரீகமாக பேசி அவரை அவமானப்படுத்தியிருக்கும் சம்பவம் குறித்து தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் வேறு யாருமல்ல, தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய நபராக விளங்கும் ராதாரவி தான். விஜய் மற்றும் அவரது குடும்பத்துடன் ராதாரவி நெருக்கமான உறவு கொண்டவர். விஜயை சிறு வயதில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவர், விஜயை செல்லமாக விஜிமா என்று தான் அழைப்பார்.

 

அவரை தான் விஜயின் உதவியாளர் அவமானப்படுத்தியிருக்கிறார். அதாவது, ராதாரவியின் பேரன் தளபதியின் ரசிகராம். அவர் விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட, அதன்படி ராதாரவி தனது குடும்பத்தாரை விஜயை சந்திக்க அழைத்து சென்றிருக்கிறார். விஜயும் அவர்களுடன் பேசி, புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம். இது 8 வருடங்களுக்கு முன்பு நடந்ததாம்.

 

இதற்கிடையே, ‘சர்கார்’ பட விழாவின் போது ராதாரவி மயக்கமடைந்து கீழே விழ இருந்த போது விஜய் அவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறார். இதனால், விஜய்க்கு நன்றி தெரிவிக்க நினைத்த ராதாரவி, அவரை நேரில் சந்தித்து நன்றி கூற, அவரது உதவியாளரை தொடர்பு கொண்டு, அனுமதி கேட்டிருக்கிறார். அவரும், அதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சம்மதம் சொன்ன விதம் தான் ராதாரவியை மனமுடைய செய்திருக்கிறது. அவர் பேசிய வார்த்தைக்குப் பிறகு ராதாரவி விஜையை சந்திக்க போகவே இல்லையாம்.

 

”வாங்க, ஆனால் அன்று போல கூட்டத்தை கூட்டிட்டு வந்துடாதீங்க” என்று விஜயின் உதவியாளர் ராதாரவியிடம் சொல்லியிருக்கிறார். அன்று ராதாரவி அழைத்து சென்றது அவரது குடும்பத்தை, அவர் குடும்பத்தை கூட்டம் என்று விஜயின் உதவியாளர் அநாகரீகமாக பேசியதால் மனமுடைந்த ராதாரவி, அன்று முதல் விஜய் வீட்டு பக்கமே போவதில்லையாம்.

 

Vijay and Radharavi

 

இதை, நடிகர் ராதாரவியே சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.

Related News

5594

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery