பொது இடத்தில் தற்கொலைக்கு முயன்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்!
Monday September-09 2019

பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியிருக்கும் தவசிராஜ், தென்னிந்திய சண்டை இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். ஆனால், அவர் சரியாக பணியாற்றாததால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

 

மேலும், சங்கத்தின் தலைவரான சோமசுந்தரத்தை தாக்க முயன்றார், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நேற்று சங்க செயற்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தவசிராஜ் மீது எழுந்த புகார்கள் குறித்து பேசப்பட்ட போது அவர் திடீரென்று வெளியே சென்று பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாகி, அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

5595

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery