அஜித்துடன் 3 வது முறையாக இணையும் நடிகை! - தல 60 அப்டேட்
Tuesday September-10 2019

அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளியாகி, இரண்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதனால், ஒரே ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலித்த ஹீரோ என்ற சாதனையை அஜித் நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனை வேறு எந்த நடிகரும் இதுவரை செய்ததில்லை.

 

இதற்கிடையே அஜித்தின் அடுத்தப் படமான ‘தல 60’ படத்தையும் போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இயக்குவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதிலும் பாசமான அப்பாவாக அஜித் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க இருக்கிறது.

 

இந்த நிலையில், அஜித்துடன் விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் மகளாக நடித்த அனிகா, ‘தல 60’ யிலும் நடிக்கிறாராம். இது குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 

Actress Anika

 

ஏற்கனவே அனிகாவை அஜித்தின் மகள், என்று பத்திரிகைகள் எழுதி வரும் நிலையில், தான் மூன்றாவது முறையாக அஜித் பப்ப்பாவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி, என்று அனிகா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related News

5598

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery