கமலின் ‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி, படத்துவக்க விழாவும் நடத்தப்பட்ட நிலையில், லைகா திடீரென்று பின் வாங்கியதால் படம் டிராப்பாகும் நிலை உருவானது. பிறகு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு மீண்டும் லைகா நிறுவனமே இந்தியன் 2 படத்தை தயாரிக்க முன் வந்ததால் தற்போது படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கும் கமல்ஹாசன் லைகா நிறுவனத்தின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
‘இந்தியன் 2’ வை தொடர்ந்து கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தையும் லைகா தயாரிப்பதாக இருந்ததாம். இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்ட நிலையில், திடீரென்று லைகா நிறுவனம், கமல்ஹாசனின் ரஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு ‘தலைவன் இருக்கிறான்’ படம் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம், என்று கூறியிருக்கிறது. இந்த தகவல் கமல் காதுக்கு போக, அவர் அதிர்ச்சியடைந்ததோடு, தனது நிறுவன ஊழியர்களை தொடர்ந்து பேச சொல்லியிருக்கிறார்.
இதனால், லைகா நிறுவனத்தோடு கமலின் ஊழியர்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியும், ஒப்பந்தத்தை ரத்து செய்வதில் லைகா நிறுவனம் உறுதியாக இருந்ததாம். இதனால், கமலே நேரடியாக சுபாஷ்கரனுக்கு போன் செய்து, தன்னை நம்பும்படியும், தலைவன் இருக்கிறான் படத்தினால் எந்தவித பாதிப்பும் வராது, என்று உத்தரவாதம் கொடுத்தாராம். அதன் பிறகு சமாதானமடைந்த சுபாஷ்கரன், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியடைந்த கமல்ஹாசன், அதில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்றும் கூறப்படுகிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...