திரிஷாவின் முன்னாள் காதலரான வருண் மணியனின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனும், நடிகை திரிஷாவும் காதலித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த அவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்ற நிலையில், திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து திரிஷா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்த தொடங்கினார்.
திருமணம் நின்றதற்கு, வருண் மணியன் வீட்டில் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று கூறியதாகவும், ஆனால் திரிஷா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியதாலும், ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, வருண் மணியனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீவிரம் காட்டி வந்த நிலையில், அவருக்கும் தினகரன் நாளிதழ் நிறுவனர் கேபி கந்தசாமியின் பேத்தி கனிகா குமரனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...