கட்டி அனைத்து கண்ணீர் விட்ட முகேன்! - கண்ணீரில் மிதக்கும் பிக் பாஸ் வீடு
Tuesday September-10 2019

பிக் பாஸ் சீசன் 3 யின் இந்த வாரம் எலிமினேஷன் ரவுட்டில் லொஸ்லியாவை தவிர அனைவரும் இடம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் எலிமினேஷனுக்காக வனிதாவை அதிகம் போட்டியாளர்கள் நாமினேட் செய்திருக்கிறார்கள். காரணம், அவருக்கு தேவையில்லாத விஷயங்களை தலையிட்டு, பிரச்சினையை பெரிதாக்கி விடுவதாகவும் காரணம் தெரிவித்துள்ளார்கள்.

 

அவர் தான் வனிதா. முகேன், தர்ஷன் மற்றும் சாண்டி ஆகியோர் வனிதாவை நாமினேட் செய்ய, வனிதா தர்ஷனை நாமினேட் செய்திருக்கிறார்.

 

ஆக, சீக்ரெட் ரூமில் இருக்கும் சேரன், இந்த வாரம் போட்டியாளராக வீட்டுக்குள் வரவும், வனிதா வெளியே போகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இன்றைய எப்பிசோட்டில் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் விருந்தாளியால் முகேன் கண்ணீர் விடுவதோடு, ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடே ஆனந்த கண்ணீர் வடிக்கிறது.

 

காரணம், இன்றைய எப்பிசோட்டில் விருந்தாளிகளாக முகேனின் அம்மா மற்றும் அவரது தங்கை வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் முகேன், சந்தோஷப்படுவதோடு, கண்ணீர் விட்டு அழவும் செய்கிறார். அவர் தனது அம்மாவை கட்டி அனைத்து அழுவதை பார்க்கும் மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். சீக்ரெட் ரூமில் இருக்கும் சேரனும் கண்ணீர் வடிக்கிறார்.

Related News

5600

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery